×

பழநி பகுதியில் தொடர் மழையால் நிரம்பி வழியும் அணைகள்

பழநி: பழநி பகுதியில் தொடர்மழையால் நிரம்பி வழியும் அணைகளில் செல்பி எடுக்க குவியும் பொதுமக்களால் அபாயம் நிலவுகிறது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி பாலாறு- பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 44.88 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 265 கனஅடி நீர் வருகிறது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 34 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 80 அடி உயரம் உள்ள 56.35 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 91 கனஅடி நீர் வருகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 7 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 66-.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணை முழுவதும் நிரம்பி விட்டது.

அணைக்கு விநாடிக்கு 191 கனஅடி நீர் வருகிறது. வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நீர்வீழ்ச்சிபோல் வழிந்து ஓடுகிறது. இதனை காண தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வரதமாநதி அணைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் ஆபத்தை உணராமல் அணையின் அருகில் நின்று செல்பி எடுத்து கொள்கின்றனர். இதனால் பொதுமக்கள் தவறி அணைக்குள் விழும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் மேல்பகுதிக்கு பொதுமக்கள் தேவையின்றி செல்வதை தடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani ,area , Palani, rain, dams
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்