×

அரசு கட்டிடத்தின் கழிவறையில் அதிமுக சின்னத்துடன் டைல்ஸ்: தேனியில் சர்ச்சை

தேனி: தேனி ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கட்டிடத்தின் கழிவறையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை நினைவுப்படுத்தும் வகையில் டைல்ஸ் ஒட்டியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எதிரே ரூ.6.20 கோடியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகம், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் அலுவலகம், ஊராட்சிகளுக்கான தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்பட உள்ளன. இந்த அலுவலகத்தை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், சென்னையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தின் கீழ்தளத்தில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை சுவற்றில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை நினைவுபடுத்தும் வகையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tags : AIADMK ,government building ,Theni , Toilet, AIADMK, icon
× RELATED தேனி தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் மனு தாக்கல்