×

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் -3 விண்கலம் விண்ணில் ஏவ திட்டம்.. 2022ல் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தவும் இஸ்ரோ தீவிரம்!!

பெங்களூரு : அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தீவிரப்படுத்தி உள்ளது. சந்திராயன் 2 விண்கலம் செலுத்தப்பட்ட பாணியிலேயே சந்திராயன் 3 விண்கலத்தையும் விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. எனினும் நிலவில் தரை இறங்குவதற்கான லேண்டர் கருவி, மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான ரோவர் வாகனம் மட்டும் சந்திராயன் 3ல் இடம் பெறும். சந்திராயன் 2 விண்கலத்தில் இடம் பெற்று இருந்த ஆர்பிட்டர் கருவி, சந்திராயன் 3 விண்கலத்தில் இணைக்கப்படவில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

விண்வெளியில் இதுவரை எந்த நாடும் தொட்டிடாத நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் தரையிறங்குவதில் ஏற்பட்ட கோளாறால் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து தவறுகள் ஏற்படாதவாறு, கூடுதல் கவனத்துடன் உருவாக்கப்பட்ட சந்திராயன் 3 விண்கலம், மீண்டும் நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.  இந்த குறிப்பிட்ட திட்டம் நிறைவேறும் நிலையில், நிலவில் வெற்றிகரம் ஆக விண்கலம் தரையிறங்க செய்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

மேலும் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதற்காக பயிற்சியளிக்கும் பணிகள் மற்றும் இன்னபிற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட இடா்பாடுகள் காரணமாக அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் அதனை திட்டமிட்டபடி 2022-ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : spacecraft ,ISRO , Chandrayaan-3, spacecraft, Kaganyan project, ISRO
× RELATED இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது