×

நாடு கடத்தலுக்கு தடை விதிக்கக் கோரும் அசாஞ்சேவின் வழக்கு!! - லண்டன் நீதிமன்றத்தில் நிராகரிப்பு!!!

லண்டன்:  அமெரிக்காவுக்கு தம்மை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு தடை கேட்டு தொடர்ந்துள்ள தனது வழக்கு விசாரணையை தாமதப்படுத்துமாறு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்த எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை பல மாதங்களுக்கு பிறகு லண்டன் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் தொடங்கியது. அப்போது ஆஜரான ஜூலியன் அசாஞ்சே வழக்கறிஞர்கள் அடுத்தாண்டு வரை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். 49 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் இணையதளம் மூலமாக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இதனையடுத்து அவர் மீது அமெரிக்க கிரிமினல் வழக்கு தொடர்ந்ததால், லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்தார். அதன் பின்னர் அங்கு சென்ற லண்டன் போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர். இதனையடுத்து உளவு குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அமெரிக்கா விரும்புகிறது.

இதனால் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என்று கூறி லண்டன் கோர்ட்டில் அசாஞ்சே வழக்கு தொடர்ந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணையானது பல மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. இந்நிலையில்தான் தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தக்கூடாது என்று கோரி ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்துள்ள வழக்கை விசாரணையை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Tags : court ,Assange ,London , Assange's case seeks ban on deportation - Rejection in London court !!!
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...