×

வெளிநாட்டு நன்கொடை பெற 4 கிறிஸ்தவ அமைப்புகளுக்கு தடை: மத்திய உள்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: வெளிநாடுகளிலிருந்து நன்கொடை வசூலிக்க 4 கிறிஸ்தவ அமைப்புகளுக்கு இடைக்கால தடை விதித்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள  22,457 தன்னார்வ அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓ) வெளிநாடுகளில் இருந்து தங்களின் சேவைகளுக்காக நன்கொடைகள் வசூலித்து வருகின்றன. இதற்கு மத்திய உள்துறையின் அனுமதி பெற வேண்டும்.ஆனால், இதில் பல அமைப்புகள் உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, மத்திய உள்துறை விதிமுறைகளுக்கு முரணாக வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெறும் நிறுவனங்களின் அனுமதி ரத்து செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள 22,457 தொண்டு நிறுவனங்களில் 20,674 தொண்டு நிறுவனங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 6702 தொண்டு நிறுவனங்களின் லைசென்ஸ் காலாவதியாகிவிட்டது. இந்த நிலையில், மணிப்பூரில் உள்ள எவாஞ்சலிகல் சர்ச்சஸ் அசோசியேசன், ஜார்கண்டில் உள்ள இரோஸ்குலிஸ் நார்த்-வெஸ்டர்ன் கோஸ்னர் எவாஞ்சலிகல், ஜார்கண்டில் உள்ள நார்த்தன் எவாஞ்சலிகல் லூதரன் சர்ச், மும்பையில் உள்ள நியூ லைப்பெல்லோஷிப் அசோசியேசன் ஆகிய 4 கிறிஸ்தவ அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை அனுமதியை நிறுத்தி வைத்து மத்திய உள்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பையில் உள்ள நியூ லைப் பெல்லோஷிப் அசோசியேசனின் லைசென்சை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்தது. வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள் மத்திய உள்துறையின் ஒப்புதல் பெறாமல் நேரடியாக இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த 4 கிறிஸ்தவ அமைப்புகள் மட்டுமல்லாமல் ராஜ்நன்டன் தொழுநோய் மருத்துவமனை, தொன்போஸ்கோ மலைவாழ் மக்கள் வளர்ச்சி சங்கம் ஆகியவற்றின் அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் உள்துறை செயலாளர் ராஜிவ் மெர்ஸி கூறும்போது, அமெரிக்காவை சேர்ந்த கம்பேஸன் அமைப்பு வெளிநாடுகள் நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றவில்லை. அதனால்தான் அந்த நிறுவனம் இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல், அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான மைக்கேல் புளும்பர்க் நடத்திவரும் புளும்பர்க் பிலந்தெரபிஸ் தொண்டு நிறுவனத்திற்கும் நன்கொடைகளை வழங்க உள்துறை தடை விதித்தது. கடந்த 2015ல் பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா சென்றபோது நியூயார்க் மேயருடன் இணைந்து இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டிகளை அமைப்பதற்கு புளும்பர்க் நிறுவனத்தின் நிதி உதவி தொடர்பான ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : organizations ,Federal Interior Action ,Christian , Overseas, to receive donations, 4 Christian organization, ban, federal interior, action
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்