×

ஊட்டி வர டூரிஸ்ட் இ-பாஸ்

ஊட்டி: நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:  இ-பாஸ் முறையில் டூரிசம் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் ஊட்டி வரலாம். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தான் சுற்றுலா பயணிகள் வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஏற்கனவே ரிசார்ட்கள், ஓட்டல்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் இ-பாசுடன் வருபவர்களை தங்க அனுமதிக்கலாம். வரும் புதன்கிழமை முதல் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்ளிட்டவைகள் மட்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. படகு இல்லம் போன்றவைகள் திறக்க இன்னும் அரசு அனுமதி தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ooty , Come to Ooty, Tourist, e-Boss
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்