×

ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை

திருச்சி: திருச்சி சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகள் லலிதா (19). மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்திருந்தார். தொடர்ந்து சத்திரம் அண்ணாமலை நகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு சேர்ந்திருந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் கல்லூரி திறக்கப்படாமல், ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. இதில் தமிழ் மீடியம் படித்த லலிதாவிற்கு, ஆங்கில வழியில் பாடம் நடத்துவது புரியவில்லை.

இது குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோரும் அவரை சமாதானம் செய்துள்ளனர். அக்கம் பக்கத்தினரும் ஆன்லைன் வகுப்பு புரியாது. கல்லூரி துவங்கிய உடன் நேரில் சென்று படிக்கலாம் எனக்கூறி உள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த லலிதா அழுது புலம்பியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தந்தை, தாய், தம்பி மளிகை கடைக்கு சென்றுவிட்டனர். மற்றொரு தம்பி மட்டும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் மின் விசிறியில் லலிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : College student ,suicide , Online class, college student, suicide
× RELATED ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை