×

குடும்பம் நடத்த மனைவி வராததால் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை

உத்திரமேரூர்: குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால், கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தை சேர்ந்தவர் வரதன். இவரது மகள் வளர்மதி (33). சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் ராஜா (36). ஆட்டோ டிரைவர். இவருக்கும், வளர்மதிக்கும், கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வளர்மதி, கணவனுடன் சண்டைபோட்டு கொண்டு தனது மகன்களுடன் தோட்டநாவல் கிராமத்தில் உள்ள பொற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து ராஜா, பலமுறை வளர்மதியை தொடர்பு கொண்டு, குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால், அவர் மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ராஜா, மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது, வளர்மதியிடம் சமாதானம் பேசி, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி மனைவியை அழைத்தார். அதற்கு அவர் மீண்டும் மறுத்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால், வேதனையடைந்த ராஜா, வீட்டில் இருந்த  மண்ணெண்ணெயை எடுத்து  தனது உடலில் ஊற்றிக்தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் முழுவதும் தீப்பரவி அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜா, சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Auto driver ,suicide , Auto driver, arson suicide
× RELATED கமிஷன் மற்றும் வருமானம் நடிகை...