காஞ்சிபுரம் நகரில் 2 இடங்களில் நவீன பயணிகள் நிழற்குடை: திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு மற்றும் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் நவீன பஸ் பயணிகள் நிழற்குடைகளை காஞ்சி திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஏகாம்பர நாதர் சன்னதி தெரு, விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹19 லட்சம் மதிப்பில்  பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு, நிழற்கூடைகள் கட்டி முடிக்கப்பட்டன.கடந்த 5 மாதங்களுக்கு பின், ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை தொடர்ந்து அனைத்து பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இதையொட்டி, பொதுமக்கள் நிழற்கூடங்களை பயன்படுத்தும் வகையில், திமுக எம்எல்ஏ  வக்கீல் எழிலரசன் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். காஞ்சிபுரம் நகராட்சி பொறியாளர் ஆனந்த ஜோதி, நகர திமுக செயலாளர் சன்பிராண்ட ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பி.சீனிவாசன், செங்குட்டுவன், நகர திமுக நிர்வாகிகள் சந்துரு, ஜெகன்நாதன், கருணாநிதி, அபுசாலி, யுவராஜ்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: