×

ராபிட் ஆன்டிபாடி சோதனை செய்ய தெளிவான வழிமுறைகள் வேண்டும்: அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சென்னை: ராபிட் ஆன்டிபாடி சோதனை தொடர்பாகவும், அதை எடுக்கும் நிறுவனங்கள் தொடர்பாகவும் தெளிவான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் 6ம் தேதி வரை தமிழகத்தில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 186 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 51 ஆயிரத்து 458 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,863 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றை ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் மட்டுமே உறுதிப்படுத்த வேண்டும் என்று மற்ற சோதனைகளை பயன்படுத்த கூடாது என்று ஐசிஎம்ஆர் மற்றும் தமிழக அரசு கூறிவருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது செலவில் ஆன்டிபாடி சோதனை எடுக்க வேண்டும் சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள பல தனியார் மையங்களில் ஆன்டிபாடி சோதனை எடுத்துவருகிறது. இதற்காக ரூ.500 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சோதனை தொடர்பாக தெளிவான விதிகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: சில தனியார் மையங்கள் ஆன்டிபாடி சோதனை செய்கிறது. இந்த சோதனையின் முடிவில் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை கொண்டு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் அல்லது ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் அல்லது குணமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனையின் படி கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்று கருதப்படுவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. அந்த ஆர்டிபிசிஆர் சோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

ஆனால் ஆன்டிபாடி  சோதனை அடிப்படையில் தொற்று ஏற்படலாம் என்று கூறப்பட்டது. இது பொதுமக்கள் இடையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே தனியார் மையங்களில் செய்யப்படும் ஆன்டிபாடி சோதனை தொடர்பாக தமிழக அரசு அல்லது சென்னை மாநகராட்சி தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். குறிப்பாக யார் யார் இந்த சோதனையை செய்ய வேண்டும், அனுமதி அளிக்கப்பட்ட சோதனை மையங்கள் எவை உள்ளிட்டவைகள் தொடர்பான தெளிவான தகவல்களை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : antibody testing ,activists ,government , Rapid antibody, test, clear, instructions, government, social activists
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...