×

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விடுதலை குறித்த கேள்வி ஆர்டிஐயில் பதில் இல்லை: ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர் மனு

பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகாவுக்கு சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வதாக தகவல் வெளியாகியது. சிறையில் உள்ள சசிகலா விடுதலை தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்துள்ளேன். எனது கேள்விக்கு முறையாக பதில் கொடுக்காமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு முன் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பி 21.9.2019ல் நான் ஆர்டிஐ சட்டத்தில் விண்ணப்பித்தேன். அதற்கு பதில் கொடுக்காமல் உள்ளதால் 22.10.2019ல் மேல்முறையீடு செய்தேன், அதற்கும் பதில் கொடுக்கவில்லை. 13.12.2019ல் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளேன். அதுவும் நிலுவையில் உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய பின் எத்தனை நாட்கள் சிறையில் இருந்தார் என்ற தகவல் கொடுக்கக்கோரி 30.6.2020ல் விண்ணப்பித்தேன். பதில் ெகாடுக்காததால் 4.8.2020ல் மேல் முறையீடு செய்துள்ளேன்.

மேலும் சிறையில் உள்ள சசிகலா எந்த நாளில் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்படுவார் என்று கேட்டு 4.8.2020ல் விண்ணப்பித்தேன். அதற்கும் இன்னும் பதில் கொடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் கேள்விகளுக்கு உரிய நாட்களுக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை மீறி வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதின் மூலம் எனக்கு நியாயம் பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Tags : release ,jail ,Sasikala ,Chief Justice ,ICC ,RTI , Property Accumulation Case, Sasikala Released
× RELATED இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால்...