×

பட்லர் அதிரடி ஆட்டம்: தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அசத்தல்

சவுத்தாம்ப்டன்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 2வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது (கேப்டன் பிஞ்ச் 40, ஸ்டாய்னிஸ் 35, மேக்ஸ்வெல் 26, ஏகார் 23). அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து வென்றது.

தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 77 ரன் (54 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மாலன் 42 ரன் (32 பந்து, 7 பவுண்டரி) விளாசி வெற்றிக்கு உதவினர். பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.


Tags : Butler ,England , Butler, England stunned to capture the series
× RELATED ஐபிஎல்லில் இன்று 2 போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ மும்பை-குஜராத் மோதல்