×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ரூ2 லட்சம் இழப்பீடு வழங்க கோரி செங்கொடி சங்கம் ஆர்ப்பாட்டம்: இழுத்து சென்று கைது செய்தது போலீஸ்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ரூ2 லட்சம் இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செங்கொடி சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ரிப்பன் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொதுச் செயலாளர் சீனிவாசலு, துணை தலைவர் எல்.சுந்தரராஜன், துணைப் பொதுச்செயலாளர் தேவராஜன் உள்ளிட்ட 300க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, குறைந்தபட்ச ஊதியம் ரூ16,725 வழங்க வேண்டும், துப்புரவு பணியை தனியாருக்கு அளிக்க கூடாது, என்யூஎல்எம், என்எம்ஆர் தொழிலாளர்களின் வேலையை பறிக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ரூ2 லட்சம் இழுப்பீடு வழங்க  வேண்டும், அரசு அறிவித்த இரட்டிப்பு சம்பளம் மற்றும் ஊக்கத் ெதாகை வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து எஸ்.கே.மகேந்திரன் பேசியதாவது: துப்புரவு தொழிலாளர்களுக்கு தினந்தோறும் ரூ624 வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த ஊதியம் வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள்  பயன்படுத்தும் துடைப்பங்களைக்கூட தங்களது ஊதியதிலிருந்து வாங்க வேண்டிய அவலம் உள்ளது. முன்களப்பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு அரசு அறிவித்த இரட்டிப்பு சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை ரூ2500 இதுநாள் வரை வழங்கப்படவில்லை. பணியாளர் ஒருவருக்கு உணவுக்காக ₹100 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், அது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஒதுக்கிக்கொள்வதாக கூறப்படுகிறது.

கொரோனாவை பயன்படுத்தி மாநகராட்சியில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஊழல் தலைவிரித்தாடும் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் இழுத்து சென்று கைது செய்தனர். பின்னர், அவர்களை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் அடைத்தனர். மாலையில் அவர்களை விடுவித்தும் அங்கிருந்து வெளியேறாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : rally ,protesters , Corona, staff, loser, Red Flag Association, demonstration, police
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி