×

கேரளாவில் தொடரும் கொடூரம்; கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற சென்ற இளம்பெண்ணை கட்டிப்போட்டு பலாத்காரம்: சுகாதார ஆய்வாளர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் பலாத்காரம் செய்த  சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன் கொரோனா நெகட்டிவ் சான்றிகழ் கேட்டு வந்த இளம் பெண்ணை சுகாதார ஆய்வாளர் கட்டிப்போட்டு பலாத்காரம் செய்தது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கொரோனா பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் வைத்து பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் அதிர்வலை அடங்கும்முன் மேலும் ஒரு இளம்பெண், சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறி  உள்ளது.

கொல்லம் அருகே குளத்துப்புழாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் மலப்புரம் மாவட்டத்தில் ஹோம் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். கடந்த இருவாரங்களுக்கு முன்பு இவர் ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு ெகாரோனா அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தினர். அவரும் தனிமையில் இருந்து வந்தார். அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தனக்கு கொரோனா இல்லை என சான்றிதழ் பெற, குழத்துப்புழா அருகே பரதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு சுகாதார ஆய்வாளர் பிரதீப் என்பவரை நாடியுள்ளார். அப்போது வீட்டுக்கு வந்தால் சான்றிதழ் தருவதாக பிரதீப்  தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த இளம்பெண்ணும் பிரதீப் வீட்டுக்கு  சென்றுள்ளார்.

அப்போது பிரதீப் அந்த இளம்பெண்ணை மிரட்டி கட்டிப்போட்டு  பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் பாங்கோடு போலீசில்  புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரதீப்பை கைது ெசய்து  சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து சுகாதார ஆய்வாளர் பிரதீப்பை சஸ்பெண்ட் செய்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உத்தரவிட்டுள்ளார்.

மிரட்டிய அதிகாரி
சம்பவம் குறித்து போலீசின் முதல் தகவல் அறிக்கையில், ‘3ம்  தேதி மதியம் 1 மணியளவில் இளம் பெண் சுகாதார ஆய்வாளர் வீட்டிற்கு சென்றுள்ளார். உள்ளே நுழைந்ததும் கதவை பூட்டி விட்டு பெண்ணின் பின்கழுத்தில் தாக்கியுள்ளார். பின்னர் கீழே பிடித்து தள்ளிய அவர் இரு கைகளையும் பின்னால் கட்டிப்போட்டு வாயில் துணியை சொருகிவிட்டு கால்களை கட்டிலில் கட்டிப்போட்டு கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலை 8.30 மணிவரை பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் ‘இது குறித்து வெளியே ெசான்னால் தனிமை முகாமில் இருந்து அனுமதியின்றி வெளியேறியதாக போலீசிடம் வழக்குப்பதிவு செய்ய சொல்வேன்’ என்று மிரட்டி அனுப்பியுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் இளம்பெண்களை அழைத்து செல்ல தடை
கேரளாவில் கொரோனா பாதித்து ஆம்புலன்சில்  சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட இளம்பெண் ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து கேரளாவில் மாநிலம் தழுவிய அளவில் எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் சைலஜா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், இரவு 7 மணிக்கு பின்னர் ஆம்புலன்சில் ெபண்களை தனியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. இது ெதாடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே ெபண்களை ஆம்புலன்சில் கொண்டு செல்லலாம். அப்போது டிரைவர் தவிர மேலும் ஒரு சுகாதாரத்துறை பணியாளர் உடன் செல்ல வேண்டும். என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags : atrocities ,Health inspector ,Kerala , Kerala, Corona Negative, teenager, rape, health inspector, arrested
× RELATED ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: காவல்துறை விளக்கம்