×

வேலூரில் பயங்கரம்: நண்பருடன் மது குடித்தவர் அகழியில் தள்ளி கொலையா? போலீசார் தீவிர விசாரணை

வேலூர்: வேலூர் கோட்டை அகழியில் நண்பருடன் இரவு நேரத்தில் மது குடித்து கொண்டு இருந்தவர் சடலமாக இன்று மீட்கப்பட்டனர். அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடந்து வருகிறது. வேலூர் கோட்டை அகழி மக்கான் சிக்னல் அருகே மீன்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. அந்த கடையின் அருகே இரவு நேரங்களில் சிலர் மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவர் அகழி கரையோரம் உள்ள சுற்றுச்சுவர் மீது அமர்ந்து இரவு நீண்ட நேரம் மது குடித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஒருவர் அகழியில் விழுந்துள்ளார். இதை அருகே மது குடித்து கொண்டு இருந்த மற்றொருவர் பார்த்து உள்ளார்.

அவர் உடனடியாக இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து தேடி உள்ளனர். ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் சடலம் அகழியில் மிதந்துள்ளது. இதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து வேலூர் வடக்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார்  வந்து சடலத்தை மீட்டனர். மேலும் சடலமாக கிடந்தவருக்கும் சுமார் 38 வயது இருக்கும். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இவருடன் மது குடித்த நபர் யார்? அவருக்கும், இறந்த நபருக்கும் ஏதாவது தகராறு ஏற்பட்டதா? அதனால் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.Tags : Vellore ,investigation , Vellore, friend, drunkard, murdered
× RELATED தோழி சாய்ஸ்