×

கொரோனா பரிசோதனை முடிவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நெகட்டிவ்: மகன் எஸ்.பி.சரண் வீடியோ வெளியீடு

சென்னை: கொரோனாவில் இருந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீண்டுவிட்டதாக மகன் எஸ்.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். தந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என உறுதியாகி உள்ளது. நுரையீரல் தொற்று குணமடைய சிறிது காலம் தேவைப்படுவதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்தது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வருகிறார். அதன்படி, இன்று எஸ்.பி.பி.சரண் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். கொரோனா பரிசோதனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நெகட்டிவ் வந்துள்ளது சரண் கூறியுள்ளார். நுரையீரல் தொற்று குணமடைந்துவருகிறது என்று தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஐபேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார்  எனவும் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார் எனவும் எஸ்.பி.சரண் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Tags : SB Balasubramaniam ,end ,Son SB Charan ,corona experiment , Corona, singer SB Balasubramaniam, Negative, son SB Charan
× RELATED கோடைகால நோய்கள்…