×

டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரத்தில் 3-வது நாளாக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம்: 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தம்!

ராமேஸ்வரம்:  டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தை தொடர்ந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. அப்போது அதில் தொடர் டீசல் விலை உயர்வால், மீன்பிடி சார்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் இறால், கணவாய் உள்ளிட்ட ஏற்றுமதி மீன்களுக்கு விலை உயராமல், பழைய விலையே நீடிப்பதால் மீன்பிடிக்க செல்ல முடியாமல், வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம்.

எனவே சர்வதேச சந்தை நிலவரப்படி இறால், மீன் விலையை உயர்த்தவும், டீசல் விலையை குறைத்து முற்றிலும் வரியில்லாத டீசலை மீனவர்களுக்கு வழங்கிட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானத்தில் தெரிவித்தனர். அதன் படி வேலை நிறுத்த போராட்டமானது கடந்த 2 நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினமும் போராட்டமானது தொடர்ந்தது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

 இந்த நிலையில், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருப்பதால், படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மீன்களுக்கும் உரிய விலை கிடைக்காததால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் மீனவர்களுக்கு டீசல் விலையை குறைத்து வழங்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது. இதனையடுத்து மீனவர்களின் போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், 30 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களே மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்.

Tags : Fishermen ,Rameswaram ,Palanisamy , Praise to Chief Minister Palanisamy who donated an eye: The hashtag trending on #Mudavarukku_mudarkan_nandri on Twitter ... First place in Tamil Nadu. !!!
× RELATED இலங்கை சிறையிலிருந்து...