×

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை பற்றி முடிவெடுக்க அரசு கால தாமதம்: பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் குற்றச்சாட்டு!!!

சென்னை:  7 பேர் விடுதலை பற்றி மாநில அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றமே உறுதி செய்து 2 ஆண்டுகள் முடிந்தும் தமிழக அரசு முடிவெடுக்காமல் தாமதிப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து அரசியலமைப்பு சட்டம் 161ன் படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு நேற்றொரு 2 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. ஆனாலும் இதுவரை அதன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

 மேலும், எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை, அவரது பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை எனவும் அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் கொரோனா பரவி வரும் சூழலில் பேரறிவாளனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறை விடுப்பையாவது அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தது. ஆனால் 2 ஆண்டுகள் ஆன பிறகும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் கடத்தி வருகிறார் என்பது புகாராகும். அதாவது ஆளுநர் தொடர்ந்து இதுகுறித்து எந்த வித முடிவும் எடுக்காமல் உள்ளதால், அற்புதம்மாள் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

Tags : release ,Rajiv Gandhi ,Perarivalan , 'Government delays decision on release of 7 in Rajiv Gandhi murder case' - Perarivalan's ready Arpudammal charge !!!
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...