திருத்தங்கல்லுக்கு வந்துள்ள வெளிநாட்டு `விருந்தாளிகள்’

சிவகாசி: திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க்கு இரைதேட வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.சிவகாசி அருகேயுள்ள சங்கரபாண்டியபுரத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா நாடுகளை சேர்ந்த செங்கால் நாரை, கூழக்கிடா ஆகிய பறவைகள் அதிக அளவில் வந்து செல்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டதாலும் பறவைகள் சரணாலயம் பராமரிப்பில் யாரும் கண்டு கொள்ளாததாலும் வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்து காணப்படுகிறது.

இதனால் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகள் நீர் தேங்கி இருக்கும் வெம்பக்கோட்டை அணை, இருக்கன்குடி அணை, திருத்தங்கல் செங்குளம் கண்மாய் உட்பட நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு இரைதேடி வருகின்றன. வெளிநாட்டு நாரை வகைகள் திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க்குள் தஞ்சம் புகுந்து வருகின்றன. வெளிநாட்டு பறவைகளை கண்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>