×

விளாங்குடி அருகே விவசாய நிலத்தில் நட்சத்திர ஆமை மீட்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகே விவசாயியின் நிலத்தில் நட்சத்திர ஆமை மீட்கப்பட்டது.அரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகேயுள்ள அலமேல்மங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை(20).

இவர் நேற்று தனது வயலுக்கு சென்றபோது, அங்கு ஆமை ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டார். அதன் அருகில் சென்று பார்த்தபோது அது நட்சத்திர ஆமை எனத் தெரியவந்தது. இதனையடுத்து அதனை பிடித்து பின்னர் அரியலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் நட்சத்திர ஆமையை பெற்றுச் சென்றனர்.

Tags : farmland ,Vilangudi , Star, tortoise, farmland ,Vilangudi
× RELATED உடன்பாட்டை மீறி விளைநிலங்களில்...