×

நல்லாம்பள்ளி கிராமத்தில் சுகாதார வளாகத்தை பராமரிக்க கோரிக்கை

பொள்ளாச்சி:  நல்லாம்பள்ளி கிராமத்தில் உள்ள சுகாதார வளாகத்தை பராமரிக்க ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அடுத்த நல்லாம்பள்ளியில் 2500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி ெபாதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 8 ஆண்டுக்கு முன் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. நாள் போக்கில் சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக அங்குள்ள கழிவறை கதவுகள் சேதமாகியும் முறையாக தண்ணீர் வினியோகிக்காமல் இருப்பதால், அப்பகுதியை சேர்ந்த பெரும்பாலானோர்  சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை சுற்றிலும் தற்போது புதர்கள் சூழ்ந்து காடுபோல் உள்ளதால் சுகாதார வளாகத்திற்கு செல்லும் வழித்தடம் உருமாறி போயுள்ளது.

 அதுபோல் சீலக்காம்பட்டி பகுதியிலும் சுகாதார வளாகம் சில ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதுவும் தற்போது முறையான பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகங்களை முறையாக பராமரித்து தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : village ,Nallampalli , Nallampalli, village Health ,premises Request ,maintain
× RELATED சுகாதார வளாகம் அமைக்க பூமி பூஜை.