×

சுப்பையா நகரில் மைதானத்தை சீரமைத்த பொதுமக்கள்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 9வது வார்டில் உள்ள சுப்பையா நகரில் உள்ள விளையாட்டு மைதானம், பூங்கா கடந்த 20 ஆண்டுக்கு மேலாக, பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டன. இதனால் மைதானம் காடுபோல் புதர் சூழ்ந்திருந்தது. இதையடுத்த அந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நகராட்சி மூலம் மேற்கொள்ள வேண்டிய இப்பணியை அங்குள்ள பொதுமக்களே சுத்தம் செய்ய முன் வந்தனர். நேற்று அந்த மைதான இடத்தை சுத்தம் செய்யும் பணியை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் மேற்கொண்டனர். இருப்பினும், வரும் நாட்களில் முறையாக சுத்தம் செய்து கொடுப்பதுடன், மைதானத்தை, இளைஞர்கள் விளையாட்டுக்காக மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,city ,Subbaiah , city ,Subbaiah, public ,renovated ,grounds
× RELATED பொதுமக்களுக்கு இலவச மாஸ்க்