×

கோடை காலத்திற்காக தயாரிக்கப்பட்ட ரூ.10 கோடி காட்டன் சேலைகள் தேக்கம்: நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் கோடை காலத்திற்காக தயாரிக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான காட்டன் சேலைகள், கொரோனா ஊரடங்கால் விற்பனையாகமல் தேக்கமடைந்துள்ளன.ஆண்டிபட்டி பகுதியில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், கொப்பையம்பட்டி, சண்முகசுந்தரபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் காட்டன் சேலைகளை உற்பத்தி செய்கின்றனர்.இங்கு சுங்குடி காட்டன், செட்டிநாடு காட்டன், பேப்பர் காட்டன் உள்ளிட்ட பல்வேறு சேலை ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.வீடுகளில் தறி அமைத்து சேலைகளை தயாரிக்கின்றன்ர். ஒரு தறியில் ஒரு நாளைக்கு 5 சேலைகள் வரை நெசவு செய்யலாம். இங்கு தயாரிக்கப்படும் சேலைகளை தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.

பொதுவாக கோடைகாலத்தில் காட்டன் சேலை அதிகமாக விற்கும். ஜனவரி மாதத்திலிருந்து கோடைகால விற்பனைக்காக காட்டன் சேலைகள் அதிகமாக உற்பத்தி செய்து வைத்திருந்தனர். ஆனால், கொரோனோ ஊரடங்கால் உற்பத்தி செய்த சேலைகளை சந்தைப்படுத்த முடியவில்லை. சேலைகள் தேக்கமடைந்ததால், நெசவாளர்கள் மேலும் தயாரிப்பில் ஈடுபடாமல் வேலையிழந்துள்ளனர்.இது குறித்து சக்கம்பட்டியைச் சேர்ந்த நெசவாளர்கள் கூறுகையில், ‘தினசரி ரூ.15 லட்சம் மதிப்பிலான காட்டன் சேலைகள் உற்பத்தி செய்வோம். கோடை காலத்திற்காக அதிகமாக காட்டன் சேலைகளை உற்பத்தி செய்வோம்.ஆனால் ஊரடங்கால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால், சேலை விற்பனை அடியோடு நின்றது. தீபாவளி நேரத்தில் நிலை சீராகும் என வாழ்ந்து வருகிறோம்’ என்றனர்.

Tags : cotton ,sarees , summer, stagnation,livelihoods ,weavers
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...