×

சாலையில் ஓடும் சாக்கடை: கால்வாய் கட்ட கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் முதல் மண்டலத்திற்குட்பட்ட சோளிபாளையம் ரோட்டில் சாக்கடை கால்வாய் இல்லாததால்  சாக்கடை கழிவு நீர் ரோட்டில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத்திற்குட்பட்ட சோளிபாளையம் ரோட்டில் ஏராளமான குடும்பங்களில் பெண்கள்,  குழந்தைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ரோட்டின் வழியாக தினசரி பனியன் நிறுவனங்களுக்கு  ஏராளமானோர் நடந்தும்,இரு சக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ரோட்டில் சத்தியம் கார்டன்  நுழைவு வாயிலில் மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் அப்பகுதிகளில்  மற்றும் அருகாமையில் உள்ள பின்னலாடை நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ரோட்டில் தேங்கி  நிற்கிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் கூறியதாவது:இந்த பகுதியில் பல ஆண்டுகளாக இதே போல தான் சாக்கடை கழிவு நீர் ரோட்டில் ஓடிக் கொண்டுள்ளது. இது குறித்து  அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ரோட்டில் கழிவு நீரை விடுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைத்து தர ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.



Tags : canal ,road , Sewer, road, build ,canal
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்