×

திருத்துறைப்பூண்டி பகுதியில் வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி

திருத்துறைப்பூண்டி:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில்  நெற்பயிர்களை மூழ்கடித்த வயலில் தண்ணீரை இன்ஜின் மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணியில் விவசாயிகள்  ஈடுபட்டனர்.திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் குறுவை சுமார் 7,200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.சம்பா சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் நேரடி விதைப்பு நடைபெற்று உள்ளது. தற்போதைய மழையினால் நேரடி நெல் விதைப்பு  செய்யப்பட்ட வயல்களில் பயிர்முளைத்துள்ளது.

இந்த நிலையில் மேலமருதூர், எழிலூர் நேமம் போன்ற பல கிராமங்களில் சில  தினங்களாக பெய்த மழையால் நீரில் பயிர்கள் மூழ்கி உள்ளது. வாய்க்கால்களில் தண்ணீர் அதிகம் உள்ளதால் தண்ணீர்  வடியாமல் முளைத்த பயிர் அழுகி விடும் நிலை உள்ளது.இதனால் விவசாயிகள் வயலில் தேங்கியுள்ள மழைநீரை வாரிஇறைத்தும், ஆயில் இன்ஜின் கொண்டும் வெளியேற்றும்  பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags : area ,Rainwater harvesting ,Thiruthuraipoondi , Rainwater ,harvesting ,fields ,Thiruthuraipoondi ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்