×

கழுகுமலை பகுதியில் பலத்த மழை: 8ஆண்டுகளுக்கு பின் நிரம்பும் குமார தெப்பம்

கழுகுமலை: கழுகுமலை பகுதியில் கடந்த 3 மாத காலமாக வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. இதனால் மதிய  நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர். வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில்  நேற்று காலையில் வழக்கம் போல வெயில் அடித்தது. ஆனால் மாலை 4 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேரம்  செல்ல செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.  கழுகுமலை நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியிலும் மழை பெய்த காரணத்தினால் கழுகுமலை கழுகாசலமூர்த்தி  கோயிலில் இருக்கும் குமார தெப்பத்தில் உள்ள பசுவாய் வழியாக மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்தது மட்டுமின்றி தெப்பக்குளத்திற்கு தண்ணீர்  வரத் தொடங்கி உள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 8 ஆண்டுக்குப் பிறகு தெப்பத்தில் உள்ள பசு வாய் முழுவதும்  தண்ணீர் வந்து தெப்பக்குளம் நிரம்பும் அளவிற்கு வந்ததினால் பசு வாய்க்கு  கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மாலை  அணிவித்து வணங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார். இந்த நேரத்தில் பக்தர்கள் குமார தெப்பத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை  என்பதனால் பக்தர்கள் இதை பார்க்க முடியாமல் சென்றனர்.

Tags : area ,Kalugumalai ,Kumara , Heavy ,rains ,Kalugumalai , Kumara ,ferry ,years
× RELATED வாட்டி வதைக்கும்...