×

மும்பையை மினி பாகிஸ்தான் என விமர்சித்தது சர்ச்சை ஆன நிலையில், நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவு!!

சண்டிகர்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிரா அரசை கங்கனா கடுமையாக விமர்சித்து இருந்தார். மும்பையை மினி பாகிஸ்தான் என விமர்சித்தது சர்ச்சை ஆன நிலையில், ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.  மன உளைச்சலால் தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். மேலும் பாலிவுட்டில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

தொடர்ந்து, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார்.  இதற்கு, மும்பை அல்லது மராட்டியத்தை யாராவது இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் முயன்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் பதிலடி கொடுத்து உள்ளார்.  வரும் 9ந்தேதி கங்கனா மும்பைக்கு விமானத்தில் வந்திறங்கினால் சிவசேனா பெண் உறுப்பினர்கள் கன்னத்தில் அறைந்திடுவார்கள் என்றும் கூறினார்.மேலும் அச்சமாக இருந்தால் மும்பை மாநகரத்திற்கு வரவேண்டாம் என்றும், கங்கனா மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் சஞ்சய் ராவுத் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்திருக்கும் கங்கனா ரனாவத், சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், வரும் 9ம் தேதி மும்பைக்கு நிச்சயம் வரப் போவதாகவும் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்றும் சவால் விடுத்தார்.
இதையடுத்து, பா.ஜ.க. ஆளும் அரியானா மாநில உள்துறை அமைச்சர் இருக்கும் அனில் விஜ், நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில், சுதந்திரமுடன் உண்மைகளை பேசுவதற்கு நடிகை கங்கனா ரனாவத் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறினார். இதே போல், கங்கனா ரனாவத் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இமாச்சல முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. இதனிடையே ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது நாள் ஒன்றுக்கு 11 பேர் கொண்ட வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பது ஆகும். மும்பை வரும் கங்கனாவுக்கு துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள். கங்கனாவின் இல்லத்துக்கும், கங்கனா வெளியே செல்லும் போதும் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.


Tags : Kangana Ranaut ,government ,Mumbai ,mini-Pakistan , Mumbai, Mini Pakistan, Controversy, Actress Kangana Ranaut, Y Division, Security
× RELATED நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து: கங்கனா ரணாவத்