×

தமிழகத்தில் மீண்டும் பயணிகள் சிறப்பு ரயில் சேவை துவங்கியது : முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே அனுமதி!!

சென்னை : தமிழகத்தில் மீண்டும் பயணிகள் சிறப்பு ரயில் சேவை துவங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை 6.10 மணி அளவில் கோவையை நோக்கி முதல் ரயில் இயங்கத் தொடங்கியது. முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகள் கொடுக்கப்படுவதில்லை முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கோவை, மயிலாடுதுறை, செங்கோட்டை, கன்னியாகுமரி, மயிலாடுதுறைக்கு இன்று முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. பயணிகளின் டிக்கெட்டுகள் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி டிக்கெட் பரிசோதனை அமைப்பு மூலம் பரிசோதிக்கப்படும்.

அதன்பிறகு எழும்பூர் ரயில்நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ள 4 மற்றும் 5வது நடைமேடைக்கு செல்ல வேண்டும். அதைப்போன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 வது நடைமேடைகள் ரயில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பயணிகளும் பரிசோதனைக்கு பிறகே ரயிலுக்கு செல்ல வேண்டும். மேலும் உடல் வெப்ப சோதனைக்காக  ரயில் நிலையத்துக்கு 90 நிமிடங்களுக்கு முன்னரே பயணிகள் வந்துவிட வேண்டும்.

Tags : passengers ,Tamil Nadu , Tamil Nadu, passenger, special train, service
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...