×

சென்னையில் ஐந்து மாத காலத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது : பயணிகள் மகிழ்ச்சி!!

சென்னை : சென்னையில் ஐந்து மாத காலத்திற்கு பிறகு இன்று மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.தினசரி காலை7 மணி முதல் இரவு 8 மணி வரை - மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இதையொட்டி, விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையம் வரை பயணிகளுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இன்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் மட்டுமே இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சின்ன மலையிலிருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான சேவை செப்டம்பர் 9ம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Peak hours என்னும் மெட்ரோ பயணிகள் அதிகமாக வரக்கூடிய நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவையும் இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மெட்ரோ நிறுத்தங்களிலும் மெட்ரோ ரயில் 50 வினாடிகள் நின்று செல்லும், முன்பு 20 வினாடிகள் மட்டுமே நின்று சென்று வந்த நிலையில். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொறுமையாக மெட்ரோ ரயில்களில் ஏறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புற ஊதா கதிர் மூலமாக காற்று சுத்திகரிப்பு செய்து அதில் உள்ள கிருமிகளை அழிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

*மெட்ரோ ரயில் இருக்கைகளில், ஒரு இருக்கை இடைவெளிவிட்டு மட்டுமே பயணிகள் அமர முடியும்.
*மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள இரண்டு நுழைவாயில்கள் மட்டுமே செயல்படும்.
*பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம்.
*உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
*மெட்ரோ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டுள்ளது.



Tags : Passengers ,Chennai ,train service starts , Chennai, Metro rail service, started, passengers
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...