×

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

திருப்போரூர்: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருப்போரூர் ஒன்றிய மாநாடு செம்பாக்கத்தில் நடைபெற்றது. சங்க செயலாளர் அருள்ராணி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத்தலைவர் லிங்கன், சங்க மாவட்டக்குழு உறுப்பினர் அன்பரசு, சி.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவன நிர்வாகி ஸ்டெல்லா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் பாரதி அண்ணா, மா.கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பொன்னப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த மாநாட்டில் திருப்போரூர் ஒன்றிய தலைவராக அன்பரசு, செயலாளராக அருள்ராணி, பொருளாளராக திருஞானசம்பந்தம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வரும் 25ம் தேதி அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை கேட்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Tags : Conference ,Association of the Handicapped , Disabled, Association Conference
× RELATED நாடாளுமன்ற, பேரவை தலைவர்கள் மாநாடு: குஜராத்தில் தொடங்கியது