×

கிரைம் நாவல் படித்து அஞ்சல் ஊழியர் தற்கொலை

பெரம்பூர்: கொடுங்கையூர் வாசுகி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (36). அஞ்சலக ஊழியரான இவர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு விஷம் குடித்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரணையில், கண்ணன் விஷம் வாங்கி வந்து குடித்ததும், ஆனால், யாரோ 3 பேர் வந்து தனது வாயில் விஷம் ஊற்றியதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இவரது வீட்டில் 100க்கும் மேற்பட்ட கிரைம் நாவல்கள் இருந்ததால், அதை படித்து தற்கொலைக்கு முயன்றாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Mail employee ,suicide , Crime novel, read, postal worker, suicide
× RELATED தற்கொலைக்கு முயன்ற நடிகை சனுஷா