×

ரயில்வே விகாஸ் நிகாம் நிறுவனம் தகவல் இரட்டை ரயில் பாதை பணி 2022ல் நிறைவு பெறும்

நெல்லை: கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரையுள்ள ரயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்ற 2 விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை-மணியாச்சி- தூத்துக்குடி 159 கி.மீ. தொலைவிற்கு ஒரு திட்டமாகவும், மணியாச்சி- நெல்லை- நாகர்கோவில் 102 கி.மீ. தொலைவுக்கு மற்றொரு திட்டமாகவும் என இருகட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மதுரை-  மணியாச்சி- தூத்துக்குடி பாதை பணிகளின் திட்ட மதிப்பீடு ரூ.1,182.31 கோடி. நாகர்கோவில் - மணியாச்சி பாதை திட்ட மதிப்பீடு ரூ.1,003.94 கோடி. இத்திட்டப் பணிகளை ரயில்வே துறையின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனமான ரயில்வே விகாஸ் நிகாம் நிறுவனம் (ஆர்விஎன்எல்) மேற்கொண்டு வருகிறது.

இரட்டை ரயில்பாதை திட்டத்தில் முதற்கட்டமாக வாஞ்சி மணியாச்சி முதல் நெல்லை மார்க்கமாக கங்கைகொண்டான் வரையிலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து மதுரை மார்க்கமாக கடம்பூர் வரையிலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி மார்க்கமாக தட்டப்பாறை வரையிலும் இருவழிப்பாதை பணிகள் நிறைவு பெற்றதையடுத்து 45 கி.மீ, தொலைவுக்கு ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் திருப்தி அடைந்த ரயில்வே அதிகாரிகள் பயணிகள் ரயில்கள் இயக்க அனுமதி அளித்தனர். இந்நிலையில் பாவூர்சத்திரம் ரயில் பயணிகள் சங்கத்தலைவர் பாண்டிய ராஜா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஆர்விஎன்எல் அதிகாரிகள், நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை உள்ள மொத்த பாதையையும் இருவழிபாதையாக மாற்றும் திட்டம் 2022க்குள் நிறைவுபெறும் என்று கூறியுள்ளனர்.


Tags : Railways, Vikas Nigam Company, Information, Dual Rail Work, to be completed in 2022
× RELATED விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்க: விசிக