×

சின்னசேலம் பகுதியில் சாமந்திப்பூ சாகுபடி அமோகம்

சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் மிக குறைந்த அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகள் கீரை செடி, காய்கறி செடி வளர்ப்பு, சாமந்தி, மல்லிகை போன்ற பூச்செடிகள் வளர்ப்பு ஆகிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற தோட்டப் பயிர்களை விவசாயம் செய்யும்போது ஆட்செலவு, பண விரையம் இல்லை. சொட்டு நீர் பாசனத்திலும் பயிர் செய்யலாம்.  இதைப்போல சின்னசேலம் பேரூராட்சி சலவை நிலையம் எதிரில் ஒரு விவசாயி தனக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தில் சாமந்தி செடி பயிரிட்டுள்ளார். கடந்த சூலை மாதம் நடப்பட்ட செடியில் தற்போது சாமந்திப் பூக்கள் பூத்து குலுங்குகிறது.

ஒரு செடியில் சராசரியாக ஒரு கிலோ பூவை அறுவடை செய்யலாம். ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.50 வரை விற்கப்படுகிறது. எதிர்வரும் ஆயுத பூஜை, கோயில் திருவிழா காலம், அய்யப்பன் கோயில் போகும் காலங்களில் சாமந்திப்பூ விற்பனை அதிகமாக இருக்கும். அதிக ஆர்டர் தேவைப்படும் காலங்களில் வியாபாரிகள் வயலை தேடி வந்து வாங்கி செல்வார்கள். பொதுவாக சாமந்திப்பூ சுக, துக்க நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவதால் இதன் தேவை எல்லா நேரத்திலும் இருக்கும்.

Tags : area ,Chinnasalem , Chinnasalem, marigold, cultivation amokam
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...