×

கொரோனா நோயாளிகளுக்கு புதிய சவால்! - டெல்லியில் 2 நோயாளிகளின் பரிசோதனையில் டெங்கு, மலேரியா உறுதியானதால் மக்கள் பீதி!!!

டெல்லி:  கொரோனா நோயாளிகளுக்கு புதிய சவாலாக டெங்கு, மலேரியா நோய்களும் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் இருவருக்கு மலேரியா, டெங்கு நோய்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கொசுக்கள் மூலம் நோய்கள் பரவும் காலம் என்பதால் கொரோனா நோயாளிகள் எளிதில் டெங்கு, மலேரியா நோய்களுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரப்பிரஸ்தா அப்பலோ மருத்துவமனையில் 30 வயது நபரையும், லோக்நாயக் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 14 வயது சிறுவனையும் டெங்கு காய்ச்சல் தாக்கியது.

இதேபோல் சென்னையிலும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் நோயாளிகள் வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சல் வழக்கமாக ஜூலை முதல் அக்டோபர் வரை உச்சத்தில் இருப்பது வழக்கம். ஏனெனில் அந்த மாதங்கள் முழுவதும் மழை காலம் என்பதால் கொசுக்கள் அதிகளவில் பரவி டெங்கு நோயை உருவாக்கும். 2015ம் ஆண்டு இந்த காலகட்டத்தில் 15 ஆயிரத்து 867 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் கொடிய டெங்குவுக்கு 60 பேர் பரிதாபமாக உரிழந்தனர். இதுவே கடந்தாண்டில் டெங்கு பாதிப்பு 2036 என்ற அளவில் குறைந்தது. இந்த நிலையில் இந்தாண்டு கொரோனா பாதித்தவர்களில் 44 சதவீத பேருக்கு டெங்கு, மலேரியா தாக்கம் இருப்பதாக தொற்று நோய் பரவல் தொடர்பான ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

ஏற்கனவே ஏராளமான மக்கள் கொலைகார கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். மேலும் பலர் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தும் வகையில் புதிய சவாலாக கொரோனா தொற்றுடன் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களும் இணைந்துள்ளன.

Tags : corona patients ,Delhi ,patient ,Corona , Corona patient, Delhi, dengue, malaria
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...