×

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 77.32% ஆக அதிகரிப்பு; உயிரிழப்பு விகிதம் 1.72% ஆக சரிவு: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 77.32% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசிங் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இங்கு தொற்றை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விட்டிருந்தாலும் இந்த கொடிய வைரசை தடுக்க முடியவில்லை. தினசரி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக 90,633 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,065 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்து 812 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 62 ஆயிரத்து 320 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 70 ஆயிரத்து 626 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 77.32% ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.72% ஆக சரிந்துள்ளது. உலகிலேயே மிக குறைவான உயிரிழப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது எனவும் கூறியுள்ளது.


Tags : recovery ,India ,Federal Ministry of Health ,Corona , India, Corona, Recovery Rate, Increase, Federal Ministry of Health
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!