×

ஆம்புலன்சுகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க தமிழகம் முழுவதும் அவரச மருத்துவ ஊர்திகளின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு!!!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 108 அவசர ஊர்திகளின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று காலை 108 ஆம்புலன்சில் பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து விபத்துள்ளானது. இதனையடுத்து தீ முற்றிலுமாக பரவி ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து நாசமடைந்தது. அதாவது செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் பகுதிகளிலிருந்து ஒரு நோயாளியை மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர், நோயாளியை ஆம்புலன்சிலிருந்து இறக்கினர். அப்போது திடீரென ஆம்புலன்சில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல் கடந்த வாரம் தென்காசியில் ஆம்புலன்சில் பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பராமரிப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாததால் இதுபோன்ற தொடர் விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பதிலளித்த மருத்துவமனைகள், தற்போதுள்ள பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஆம்புலன்சை சரிவர கவனிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இதுபோன்ற தொடர் விபத்துகளை தவிர்ப்பதற்காக சற்று முன்பு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், கொரோனா காலத்தில் ஆம்புலன்சுகளை முறையாக கவனிக்க நேரமில்லாத காரணத்தினால், இதுபோன்ற தொடர் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் இனி வரும் காலங்களில் இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். ஆகவே மாதந்தோறும் நோயாளிகளை அழைத்து செல்லும் அவரச ஊர்திகளை சரியாக பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கப்பட்ட அறிக்கையானது மாதந்தோறும் தனக்கு அளிக்கப்படவேண்டும் என்கிற உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் 108 அவசர ஊர்திகளின் முதன்மை செயலாளர் செல்வகுமார் தலைமையில் அறிக்கையை கண்காணிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Tags : inspection ,Tamil Nadu ,Health Department ,fires , Health Department, orders inspection, ambulances ,Tamil Nadu, prevent fires, ambulances !!!
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...