×

51 ஆண்டுகளுக்குப் பின்னர் இடைத்தேர்தலை சந்திக்கும் கன்னியாகுமரி: குமரி எம்.பி. எச். வசந்தகுமார் மறைவால் விரைவில் இடைத்தேர்தல்

குமரி: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 51 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாகர்கோவில் தொகுதியில் 1967-ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்.பி.யான மார்ஷல் நேசமணி அடுத்த ஆண்டே மரணமடைந்தார். இதை அடுத்து 1969-ம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்த தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட காமராஜர் வெற்றி பெற்றார்.

நாகர்கோவில் தொகுதி 2008-ம் ஆண்டில் தொகுதி சீரமைப்பில் குமரி தொகுதியாக மாறியுள்ளது. 2019-ம் ஆண்டில் குமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எச். வசந்தகுமார் திடீர் மறைவை அடுத்து அங்கு 51 ஆண்டுகளுக்கு பின்னர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 1951-ம் ஆண்டில் அங்கு மார்ஷல் நேசமணியும், 1957-ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் தாணுலிங்க நாடாரும், நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்றனர். 1962, 1967 -ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் மார்ஷல் நேசமணி வெற்றி பெற்றார்.

ஆனால் அடுத்த ஆண்டே நேசமணி திடீர் மறைவை அடுத்து அங்கு 1969-ம் ஆண்டில் இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. குமரி நாடாளுமன்ற தொகுதியில் கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.


Tags : death ,elections ,Vasantha Kumar ,Kanyakumari ,Kumari MP H. By-election , Kumari MP H. Vasanthakumar, by-election
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...