×

வரும் 12-ம் தேதி முதல் தமிழகத்துக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்: 10-ம் தேதி முதல் முன்பதிவு...ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.!!!

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு வரும் (7ம் தேதி) நாளை முதல் துவங்க உள்ளது. இதையடுத்து  சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை,  தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு 9 சிறப்பு ரயில்கள் எந்த நேரங்களில், எத்தனை நாட்கள் இயக்கப்படும், டிக்கெட் முன்பதிவு எப்போது நடைபெறும் என்று அறிவித்தது.

தொடர்ந்து, நேற்று முன்தினம், மேலும் கூடுதலாக 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்துக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் இன்று  அறிவித்துள்ளது.

1. எம்ஜிஆர் சென்னை சென்ரல்-புதுடெல்லி (ரயில் எண் 02615) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 12ம் தேதி முதல் இரவு 07.15 மணிக்கு எம்ஜிஆர் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 14-ம் தேதி  காலை 06.30 மணிக்கு புதுடெல்லி சென்றடையும். மறுமார்க்கமாக, புதுடெல்லி-எம்ஜிஆர் சென்னை சென்ரல்(ரயில் எண் 02616) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் 14ம் தேதி முதல் மாலை 6.40 மணிக்கு புதுடெல்லியில் இருந்து  புறப்பட்டு மறுநாள் 16-ம் தேதி காலை 6.20 மணிக்கு எம்ஜிஆர் சென்னை சென்ரல் வந்தடையும்.

2. எம்ஜிஆர் சென்னை சென்ரல்- சாப்ரா (ரயில் எண் 02669) இடையே இயக்கப்படும் வாரத்திர சிறப்பு ரயில் திங்கள் மற்றும் சனிகிழமைகளில் மாலை 5.40 மணிக்கு எம்ஜிஆர் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்  மற்றும் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 11.45 மணிக்கு சாப்ரா சென்றடையும். மறுமார்க்கமாக, சாப்ரா-எம்ஜிஆர் சென்னை சென்ரல் (ரயில் எண் 02670) இடையே இயக்கப்படும் வாரத்திர சிறப்பு ரயில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 09.00  மணிக்கு சாப்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் மதியம் 02.25 மணிக்கு எம்ஜிஆர் சென்னை சென்ரல் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் வரும் 12ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

3. திருச்சி- ஹவுரா (ரயில் எண் 02664) இடையே இயக்கப்படும் வாரத்திர சிறப்பு ரயில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாலை 4.20 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வியாழன்மற்றும் ஞாயிற்று கிழமைகளில்  அதிகாலை 03.10 மணிக்கு ஹவுரா சென்றடையும். மறுமார்க்கமாக, ஹவுரா-திருச்சி (ரயில் எண் 02663) இடையே இயக்கப்படும் வாரத்திர சிறப்பு ரயில் வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை 4.10 மணிக்கு ஹவுரா ரயில் நிலையத்தில்  இருந்து புறப்பட்டு சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் அதிகாலை 03.05 மணிக்கு திருச்சி வந்தடையும். இந்த சிறப்பு ரயில் வரும் 12ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

எம்ஜிஆர் சென்னை சென்ரல்-புதுடெல்லி, எம்ஜிஆர் சென்னை சென்ரல்- சாப்ரா, திருச்சி-ஹவுரா இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வரும் 10ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, எங்கிருந்து சென்றாலும், செரும் இடத்தின் முகவரி கட்டாயம்  தெரிவிக்க வேண்டும் என்ற விதி கூடுதலாக ரயில் டிக்கெட் முன்பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Tamil Nadu ,Ministry of Railways ,announcement , 3 more special trains to Tamil Nadu from 12th: Booking from 10th ... Railway Ministry announcement !!!
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...