×

மாங்கரை அதிரடிப்படை வீரர்கள் முகாமிற்குள் நுழைந்த மக்னா யானை: வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்

பெ.நா.பாளையம்: கோவை ஆனைகட்டி செல்லும் சாலையில் உள்ள மாங்கரை ஆயுர்வேத மருத்துவமனை அருகே அதிரடிப்படை வீரர்கள் முகாம் உள்ளது. கேரள எல்லை பகுதி என்பதால் நக்சல் தடுப்பு நடவடிக்கைக்காக இம்முகாம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வாயில் காயத்துடன் சுற்றி திரியும் மக்னா யானை ஒன்று கேரளா மற்றும் தமிழ்நாடு வன பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வந்து செல்கிறது.மாங்கரை அருகே உள்ள அதிரடிப்படை போலீசார் தங்கி இருக்கும் முகாம் பகுதிக்கு நேற்று மாலை 6 மணிக்கு மக்னா யானை வந்தது.

இதைப் பார்த்த வீரர்கள் யானையை துரத்தும் முயற்சியில்  ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சமையல் கூடத்தில் இரவு உணவு தயார் செய்து கொண்டிருந்தனர். அந்த பகுதிக்குள் யானை நுழைந்ததால் அங்கிருந்த வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். கூடத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த போலீஸ் வேனை சிறிது நேரம் உலுக்கிய யானை பிறகு வேறு பகுதிக்கு சென்றது. பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் யானையை காட்டு பகுதிக்குள் விரட்டியடித்தனர். அதிரடிப்படை முகாமிற்குள் மக்னா யானை புகுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : soldiers ,camp ,Mangarai Task Force ,Magna , Mangrove, Task Force Warriors, Elephant
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு