×

தமிழகத்தில் நாளை இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது

* 5 மாதத்துக்கு பின் கவுன்டர்களில் மக்கள் கூட்டம்
* பயணிகள் ஆர்வமுடன் முன்பதிவு

சென்னை: தமிழகத்தில் இயக்கப்படவுள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பு பதிவு 4 ரயில் நிலையங்களில் நேற்று துவங்கியது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதன்படி ரயில் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு 13 சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அவை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி சிறப்பு ரயில் (02675), கோவை - சென்ட்ரல் இன்டர்சிட்டி சிறப்பு ரயில் (02676), சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி சிறப்பு ரயில் (02679),

கோவை- சென்ட்ரல் இன்டர்சிட்டி சிறப்பு ரயில் (02680), கோவை - சென்ட்ரல் அதிவேக சிறப்பு ரயில் (02674), சென்ட்ரல்- கோவை அதிவேக சிறப்பு ரயில் (06273), கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி சிறப்பு ரயில் (02084), மயிலாடுதுறை - கோவை ஜன்சதாப்தி சிறப்பு ரயில் (02083), எழும்பூர் - திருச்சி சிறப்பு ரயில், திருச்சி - எழும்பூர் சிறப்பு ரயில் (06796), காரைக்குடி - எழும்பூர் அதிவேக சிறப்பு ரயில் (02606), எழும்பூர் - காரைக்குடி அதிவேக சிறப்பு ரயில்(02605), மதுரை - எழும்பூர் அதிவேக சிறப்பு ரயில் (02636), மதுரை - சென்னை எழும்பூர் அதிவேக சிறப்பு ரயில் (02638), எழும்பூர் - மதுரை அதிவேக சிறப்பு ரயில் (02637),

தூத்துக்குடி - எழும்பூர் சிறப்பு ரயில் எழும்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (02693) உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று சென்னை எழும்பூர் ரயில்நிலையம், ெசன்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையங்கள் என 4 இடங்களில் காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. மேலும் கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு டிக்கெட் கவுண்ட்டர்களில் முன்பதிவு தொடங்கியதால் காத்திருந்து முன்பு செய்தனர். மேலும் முகக் கவசம் அணிந்து, கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டோர் பின்னர் தான் டிக்கெட் கவுண்ட்டர் அருகே அனுமதிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பயணிகள் சமூக இடைவெளி கடைபிடித்து வரிசையாகச் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தனர். ஏற்கனவே விண்ணப்பப் படிவங்களில் புறப்படும் இடம், சேரும் இடம், தேதி மட்டும் பூர்த்தி செய்தால் போதும், ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக நேற்று தங்களுைடய முகவரி, செல்போன் எண் போன்றவற்றை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று கூறினார். அப்படி எழுதியவர்களுக்கு தான் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அனைத்து பயணிகளும் ரயில் நிலையத்துக்கு வரும் போதும், பயணத்தின் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து பயணிகளும் பயண நேரத்துக்கு 90 நிமிடங்கள் முன்னர் ரயில் நிலையம் வர வேண்டும். பயணம் செய்யும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். ரயில் நிலையத்திலும், பயணத்தின் போதும் சமூக இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



Tags : Booking ,Tamil Nadu , Tamil Nadu, special train, booking started
× RELATED டிக்கெட் முன்பதிவு மையம் இன்று மதியம் வரை மட்டுமே