×

நன்னடத்தை மீறிய ரவுடிக்கு சிறை

ஆவடி: கோயில்பதாகை, பூம்பொழில் நகர், சூரியகாந்தி தெருவை சேர்ந்தவர் பிரபு (23). பிரபல ரவுடி. இவர், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதற்கிடையில், கடந்த ஜனவரி 20ம் தேதி ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் நடராஜன் ரவுடி பிரபுவை எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாமல் இருக்க அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனரிடம் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரிடம் பிரபு ஒரு வருடத்திற்கு என்ற குற்றச்செயலில் ஈடுபடமாட்டேன் என நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தார். கடந்த ஜூலை 31ம் தேதி பிரபு ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டார். இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனால், ரவுடி பிரபு நன்னடத்தை உறுதிமொழியை மீறியதால் அவரை  இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் நேற்று அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் டாக்டர் தீபா சத்யனிடம் ஆஜர்படுத்தினர். நன்னடத்தை மீறிய ரவுடிக்கு 137 நாள் சிறை தண்டனை விதித்தார்.


Tags : Rowdy , Probation, transgression, rowdy, imprisonment
× RELATED மயிலாப்பூரில் பயங்கரம்: சிறையில்...