×

மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அட்டை விநியோகம்: எம்டிசி மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டிற்கான (ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை) புதுப்பிக்கப்பட்டுள்ள 2,056 மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அட்டைகள் சென்னை கே.கே.நகர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வாயிலாக வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச பயண சலுகை அட்டை அந்தந்த மாவட்டங்களிலுள்ள மறுவாழ்வு அலுவலகங்கள் மூலமாகவே வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சென்னையிலும் மாற்றுத் திறனாளிகள், தங்கள் சலுகை அட்டையை புதுப்பிக்கும் பொருட்டு, தொடர்புடைய மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களுக்கு சென்று உரிய விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை (மாவட்ட மறுவாழ்வு அலுவலரின் சான்றிதழோடு) மீண்டும் மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்திற்கு வந்து உரிய சலுகை அட்டைகளை பெறுவதில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் தலைமையகம் ஓரிரு முறை வந்து செல்லும் அலைச்சலை தவிர்த்து, விண்ணப்பம் பெறுகின்ற அலுவலகங்களிலேயே இந்த பயண அட்டைகளை உடனுக்குடன் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் promtc123@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் 044-23455801 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : MTC ,Disabled ,District Rehabilitation Offices ,Managing Director ,Transferee , Transferee, Offer Card Distribution, MTC Managing Director
× RELATED மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி