மசூதியில் 6 ஏசி வெடித்து 12 பேர் பலி

தாகா: வங்கதேச தலைநகர் தாகா அருகே, நாராயண்கஞ்ச் நதிக்கரை துறைமுகம் உள்ளது. இதன் அருகே உள்ள மசூதியில் ேநற்று முன்தினம் இரவு வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மசூதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்த தீயை அணைத்தனர். உள்ளே படுகாயங்களுடன் துடித்துக் கொண்டிருந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அன்றிரவே, சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி இறந்தான். நேற்று காலை மேலும் 11 பேர் இறந்தனர். படுகாயமடைந்த 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடலில் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிர் பிழைப்பது கடினம் என சந்தேகிக்கப்படுகிறது. மசூதியில் இருந்த 6 ஏசிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories:

>