அமைப்புசாரா தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று புதுப்பிக்க கால நீட்டிப்பு: அமைச்சர் நிலோபர் கபில் அறிவிப்பு

சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நல வாரியங்களில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்கள் 60 வயது பூர்த்தி அடைந்தால் அவர்கள் மாத ஓய்வூதியம் பெற்றிட வாரியங்களின் நல திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஓய்வூதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆயுள் சான்றினை ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரிடம் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏப்ரல் மாதத்தில் அளிக்க வேண்டும். தற்போது கொரோனா காரணமாக அமைப்புசாரா நல வாரியங்களில் தங்களது பதிவினை புதுப்பித்தல் செய்வதும் ஆயுள் சான்றினை அளிக்கவும் இயலாத நிலை ஏற்பட்டது. எனவே 1.3.2020 முதல் 31.12.2020 வரை உள்ள பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் புதுப்பித்தல் தேதி 31.12.2020 வரை ஒரு தடவையாக தமிழக அரசால் தளர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஓய்வூதியம் பெரும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் தேதியும் 31.12.2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: