×

மேல்மலையனூர் கோயிலில் சமூக இடைவெளியை மறந்த அமைச்சர்கள்

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நேற்று மாலை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், மாபா. பாண்டியராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஏபி ரமணன் ஆகியோர் திடீரென கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அமைச்சர்களுடன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்திற்குள் சென்றனர். சமூக இடைவெளியை பின்பற்றால் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர். அமைச்சர்கள் மற்றும் உடன் வந்த முன்னாள் அமைச்சர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் கும்பலாக சென்று சாமி தரிசனம் செய்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags : Ministers ,Melmalayanur , Melmalayanur Temple, Community Gap, Forgotten Ministers
× RELATED முத்துமாரியம்மன் கோயிலில் சரஸ்வதி...