×

டிஒய்எப்ஐ நிர்வாகிகள் கொலை வழக்கில் தேடப்பட்டவர் தற்கொலை முயற்சி: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 2 டிஒய்எப்ஐ நிர்வாகிகள் கொலையில் தொடர்புடைய உண்ணி, தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், வெஞ்ஞாறமூடு அருகே வெம்பாயம் பகுதியை சேர்ந்தவர் மிதிலாஜ் (32). தேம்பாமூடு பகுதியை சேர்ந்தவர் ஹக் முகமது (28). 2 பேரும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளாக இருந்தனர். கடந்த 30ம் தேதி நள்ளிரவு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சஜீப், சனல், ஷாஜித், அஜித், நஜீப், சாதிமோன் மற்றும் ஸ்ரீஜா என 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் உண்ணி (49) என்பவரை ஆபத்தான நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டன. இவர் மடப்புரத்தை சேர்ந்த ஐஎன்டியூசி ஆர்வலர் எனவும், தற்கொலைக்கு முயன்றபோது மீட்கப்பட்டார் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் அவரை கைது செய்தனர். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அன்சாரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக தெரிகிறது. கொலை நடந்த இரவு அனைவரும் பிரிந்து சென்று விட்டனர். உண்ணி மறுநாள் காலையில் மடப்புரம் மலை உச்சிக்கு சென்றுள்ளார். அன்று இரவு வள்ளியருப்பங்காடு தோட்டத்தின் அடிவாரத்தை அடைந்து 2 நாட்கள் தங்கி இருந்துள்ளார். பின்னர் உண்ணி ஒரு மரக்கிளையில் துணியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மரக்கிளை உடைந்து கீழே விழுந்ததில் உண்ணிக்கு காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : executives ,Kerala ,DOFI , DOFI executives, wanted in murder case, attempted suicide, Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...