×

வேலூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் திமுக அமோக வெற்றி-ஒரு இடத்தை அதிமுக வென்றது

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் அடங்கிய 5 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை அள்ளியது திமுக. கே.வி.குப்பம்(தனி) தொகுதியில் மட்டும் அதிமுகவின் கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூஜை ஜெகன்மூர்த்தி வெற்றிபெற்றுள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று பிப்ரவரி 26ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடந்தது. மனுக்கள் பரிசீலனை 20ம் தேதி நடந்தது. 22ம் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.இறுதியில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேயன், அதிமுக சார்பில் எஸ்.ஆர்.கே.அப்பு, அமமுக சார்பில் வி.டி.தர்மலிங்கம், நாம் தமிழர் கட்சி சார்பில் பூங்குன்றன், மநீம சார்பில் விக்ரம் சக்ரவர்த்தி உட்பட 17 பேர் களத்தில் நின்றனர்.காட்பாடி தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுக சார்பில் ராமு, அமமுக சார்பில் ஏ.எஸ்.ராஜா, நாம் தமிழர் கட்சி சார்பில் திருக்குமரன், மநீம கூட்டணி சார்பில் சுதர்சன் உட்பட 15 பேர் களத்தில் நின்றனர்.அணைக்கட்டு தொகுதியில் திமுக சார்பில் ஏ.பி.நந்தகுமார், அதிமுக சார்பில் த.வேலழகன், அமமுக சார்பில் சதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சுமித்ரா, மநீம கூட்டணி சார்பில் ராஜசேகர் உட்பட 13 பேர் போட்டியிட்டனர். கே.வி.குப்பம்(தனி) தொகுதியில் திமுக சார்பில் சீதாராமன், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவைஜெகன்மூர்த்தி, அமமுக சார்பில் தனசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யராணி, மநீம கூட்டணி சார்பில் வெங்கடசாமி உட்பட 10 பேர் போட்டியிட்டனர்.குடியாத்தம்(தனி) தொகுதியில் திமுக சார்பில் அமுலு விஜயன், அதிமுக சார்பில் பரிதா, அமமுக சார்பில் ஜெயந்தி பத்மநாபன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலையேந்திரி, மநீம கூட்டணி சார்பில் பாபாஜி ராஜன் உட்பட 15 பேர் போட்டியிட்டனர். வேலூர் மாவட்டத்தில் அடங்கிய 5 சட்டமன்ற தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர், மநீம கூட்டணி சார்பில் 70 பேர் போட்டியிட்டனர்.வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் வேலூர் மாவட்டத்தில் அடங்கிய வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் கே.வி.குப்பம் தொகுதியை தவிர மற்ற 4 தொகுதிகளை திமுக கைப்பற்றியது.அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 7வது சுற்றின்போது வாக்கு பதிவான இயந்திரம் பழுதானதால், கடைசியாக எண்ணப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். கடைசி சுற்றில் 6ஆயிரம் வாக்குகள் திமுக வேட்பாளர் பெற்றிருந்தார். எனவே பழுதான வாக்கு இயந்திரத்தில் 700 வாக்குகள் இருந்தது. தேர்தல் விதிப்படி 5ஆயிரம் வாக்குகள் இருந்ததால் எண்ணி பயனில்லை. எனவே பழுதான வாக்கு எந்திரத்தில் இருந்த வாக்குகள் எண்ணத்தேவையில்லை, இதில் திமுக வேட்பாளர் 6ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் உள்ளதால், திமுக வேட்பாளர் வெற்றி பெறுகிறார் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கட்ராமன் அறிவித்தார்.தொகுதிக்கு எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள்வாக்குப்பதிவு இயந்திரத்தை பொறுத்தவரை 15 வேட்பாளர்களுடன் நோட்டா ஒன்று சேர்த்து 16 பேருடன் வாக்குப்பதிவு செய்யும் வகையில் இருந்தது. அதன்படி வேலூர் தொகுதியில் 17 பேர் களத்தில் நின்றதால் தலா ஒரு வாக்குச்சாவடிக்கு 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும், காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு இயந்திரமும் என பயன்படுத்தப்பட்டன.மேலும் வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியில் 364 மையங்களும், காட்பாடி தொகுதியில் 349 மையங்களும், கே.வி.குப்பம் தொகுதியில் 311 மையங்களும், குடியாத்தம் தொகுதியில் 408 மையங்களும், அணைக்கட்டு தொகுதியில் 357 மையங்களும் என 1,789 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.சுயேட்சைகளுக்கு 193 சின்னங்கள் தமிழக சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மொத்தம் 193 சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது….

The post வேலூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் திமுக அமோக வெற்றி-ஒரு இடத்தை அதிமுக வென்றது appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Dizhagam Amoka ,Vellore ,Kubbam ,District ,Dinakaran ,
× RELATED 9 மையங்களில் நீட் தேர்வை 5,266 மாணவர்கள்...