×

ஐபிஎல் அட்டவணை இன்று வெளியாகிறது

மும்பை: ஐபிஎல் போட்டியின் 13வது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மார்ச் 29 - மே 4 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால்,கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தொடர், வரும்19ம் தேதி முதல் நவ.10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகள் வழக்கமாக வார இறுதி நாளில் நடைபெறும். முதல்முறையாக இம்முறை இறுதிப்போட்டி செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது.

போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்குகளில் நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் அணிகள் ஆகஸ்ட் மாதமே அமீரகம் சென்று விட்டன. டைட்டில் ஸ்பான்சர் தேர்வு உட்பட பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன போட்டி அட்டவணை அறிவிப்பு நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் ‘ஐபிஎல் போட்டி அட்டவணை செப்.6ம் தேதி (இன்று) வெளியாகும்’ என்று நேற்று உறுதி செய்தார்.கூடவே போட்டிகள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்ற விவரமும் அட்டவணையில் இடம் பெறும். போட்டிகள் மொத்தம் 53 நாட்கள் நடைபெறும்.

Tags : IPL , The IPL schedule, today, is released
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி