×

சில்லி பாயின்ட்...

* யுஎஸ் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட ஜோகோவிச், ஷபோவலாவ், அலெக்சாண்டர் ஸ்வெரவ், போர்னா கோரிக், கரினோ புஸ்டா, டேவிட் காபின் தகுதி பெற்றுள்ளனர். மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் ஒசாகா, குவித்தோவா, கெர்பர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

* செவில்லா அணியை சேர்ந்த செர்ஜியோ ரிகோ, பிஎஸ்ஜி கால்பந்து அணியின் கோல் கீப்பராக 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

* ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து 20 ஓவரில் 162/7 (பட்லர் 44, மாலன் 66). ஆஸி. 20 ஓவரில் 160/6 (வார்னர் 58, பிஞ்ச் 46, ஸ்மித் 18, ஸ்டாய்னிஸ் 23*). 2வது போட்டி இன்று நடக்கிறது.

* பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளதாக நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

* பிரான்ஸ் கால்பந்து லீக் தொடரில் அடுத்த வாரம் நடக்க உள்ள போட்டிகளுக்கு 7,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

Tags : Roulette, point
× RELATED சில்லி பாயிண்ட்