×

இந்தியாவுக்கு நேபாள நாட்டின் அடுத்த மிரட்டல் ராணுவத்தில் கூர்க்கா நியமனத்துக்கு தடை? பின்னணியில் சீன சதி? மத்திய அரசு செம கடுப்பு?

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் நேபாள கூர்க்கா இனத்தவரை இனி நியமிக்க நேபாள அரசு தடை விதிக்க திடீரென திட்டமிட்டுள்ளது. சீனாவின் தூண்டுதலின் பேரில் புதுக்குழப்பத்தை நேபாள அரசு எழுப்பி, இந்தியாவை  தொடர்ந்து சீண்டுவதாக தெரிகிறது. இந்தியாவின் நட்பு நாடாக பல ஆண்டாக இருந்து வந்த இமயமலை ஒட்டிய மலை நாடான நேபாளம் சமீப காலமாக திடீரென இந்தியாவுக்கு எதிராக அடுத்தடுத்து பிரச்னைகளை கிளப்பி வருகிறது. சில மாதங்கள் முன், எல்லையில் காலாபாணி உட்பட சில பகுதிகளை தன் பகுதிகள்  என்று போர்க்கொடி உயர்த்தியது.

இப்படி பிரச்னை கிளப்பியதுடன் சும்மா இருக்காமல், தன்னிச்சையாக புதிய வரைபடத்தை தயார் செய்து, சர்வதேச அளவில் பிரசாரம் செய்தது. இந்த நிலையில், நேபாள வெளியுறவு துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி காத்மாண்டுவில் ஒரு விழாவில் பேசுகையில், இந்திய ராணுவத்தில் நேபாள கூர்க்கா இனத்தவர் கணிசமான அளவில் வீரர்களாக உள்ளனர். கடந்த 1947ம் ஆண்டு இந்தியா - பிரிட்டன் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூர்க்கா இனத்தவரை இந்தியா தன் ராணுவ படைகளில் நியமிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை பல ஆயிரம் பேரை இந்தியா நியமித்து விட்டது. ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாக தான் பொருள். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், மீண்டும் ஒரு ஒப்பந்தம் தான் போட வேண்டும்’ என்று திடீர் சர்ச்சை கருத்தை கிளப்பினார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,‘நேபாளம் சமீப காலமாக சீனாவின் தூண்டுதல் காரணமாகத்தான் அடுத்தடுத்து தேவையில்லாமல் பிரச்னைகளை கிளப்பி வருகிறது. எல்லை பிரச்னை என்பது செயற்கையானது. நேபாளத்துக்கு சொந்தமாகவே இருக்காத பகுதிகளை திட்டமிட்டு, சீனாவின் தூண்டுதல் காரணமாக நேபாள அரசு எழுப்பி வருகிறது. தற்போது கூர்க்கா பிரச்னையை கிளப்பி உள்ளது. இந்த பிரச்னைகள் பற்றி விரைவில் நடக்க உள்ள இருதரப்பு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் போது பேசி, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது’  என்றார்.

எல்லையில் என்ன குழப்பம்?
இந்திய - நேபாள எல்லையில் இந்தியாவுக்கு சொந்தமான காலாபாணி, லிபுலெக், லிம்பியாதுறா ஆகிய பகுதிகளை, அதாவது 355  கிமீ பரப்பு பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து பிரசாரம் செய்து வருகிறது நேபாள அரசு. இப்படி செய்யுமாறு தூண்டி விட்டதே சீனா தான். அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கும் இந்தியாவை மிரட்டி பணியவைக்க சீனா பல வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக நேபாளத்தை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டுள்ளது. எல்லை பிரச்னையை இந்திய எல்லை தொழில்நுட்ப ராணுவ பிரிவினர் பரிசீலித்து நேபாளம் சொல்வது செயற்கையானது என்று தௌிவாக கூறியுள்ளனர். இதனால் மத்திய அரசு இது பற்றி கவலைப்படவில்லை. இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு வரும் போது தெளிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
கூர்க்கா பிரச்னை புதிதாக எழும்பி உள்ளதால் அது பற்றியும் விரிவாக பேச மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நேபாள கூர்க்கா இனத்தவரை நியமிக்க நேபாள அரசு தடை விதிக்குமானால், பெரும் விளைவுகளை அது சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்க உள்ளதாக தெரிகிறது.

ராணுவத்தில் கூர்க்காக்கள்
* இந்திய ராணுவத்தில் 35,000 கூர்க்கா இனத்தவர் உள்ளனர். 7 ரெஜிமென்ட்களில் அவர்கள் பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர்.
* இவர்கள் பெரும்பாலும் சீன, பாகிஸ்தான் எல்லைகளில் தான் கண்காணிப்பு பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
* கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தபோது, நேபாள கூர்க்கா இனத்தவரை நியமித்து கொள்ள இந்தியா - பிரிட்டீஷ் ஆதிக்கத்தினர் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
* அதன் பேரில் இப்போதும் ஆண்டுதோறும் 1300 கூர்க்கா இனத்தவர் இந்திய ராணுவத்தில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
* கூர்க்கா இனத்தவரை இந்திய ராணுவத்தில் நியமிக்க 1947ம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது: புதிய ஒப்பந்தம் போட வேண்டும்; அதுவரை நேபாள அரசு மூலம் தான் நியமிக்க வேண்டும் என்று நேபாள வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

Tags : India ,Gorkha ,Nepal ,army ,Chinese ,Cemetery ,Government , India, Nepal, next threat, gurkha in the army, ban on appointment ?, background, Chinese conspiracy? , Federal Govt.
× RELATED கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்